மேலும் செய்திகள்
'அரோகரா' கோஷம் முழங்க சூரசம்ஹாரம் கோலாகலம்!
28-Oct-2025
அவிநாசி: திருமுருகன்பூண்டியில் திருமுருகநாத சுவாமி கோவிலில் கந்த சஷ்டியை முன்னிட்டு நடைபெற்ற சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. கந்த சஷ்டி விழாவில், நேற்று காலை சஷ்டி மண்டபத்தில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க மங்கள வாத்தியத்துடன் திருக்கல்யாண வைபவம் நடந்தது. திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், 'வெற்றிவேல் வீரவேல்' என கோஷமிட்டு, பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நான்கு இடங்களில் எல்.இ.டி. திரைகள் பொருத்தப்பட்டு திருக்கல்யாண உற்சவத்தை பக்தர்கள் கண்டு களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் விமலா, அறங்காவலர்கள் குழு தலைவர் ராமநாதன், அறங்காவலர்கள் பாலகிருஷ்ணன், உமாகாளீஸ்வரி, சென்னியப்பன், பழனிசாமி, கட்டளைதாரர்கள், கோவில் சிவாச்சார்யார்கள் உட்பட பலர் செய்திருந்தனர்.
28-Oct-2025