உள்ளூர் செய்திகள்

மா.கம்யூ., மாநாடு

திருப்பூர் : மா.கம்யூ., செட்டிபாளையம் கிளை மாநாடு, கட்சி உறுப்பினர் சுப்ரமணியம் தலைமையில் நடந்தது. மா.கம்யூ., வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் காளியப்பன், மாநாட்டை துவக்கி வைத்தார்.மாநாட்டில், 'ஏழை எளிய மக்கள் வீடு கட்டும் வகையில் மனைப்பட்டா வழங்க வேண்டும். செட்டிபாளையம் குமரன் காலனி, பிரியங்கா நகர், இந்திரா நகர், நெசவாளர் காலனி மக்கள் பயன்பெறும் வகையில், ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். 'மயானம் சென்று வர தார் சாலை அமைக்க வேண்டும். பழுதடைந்துள்ள தொகுப்பு வீடுகளை புதுப்பிக்க அரசு நிதி ஒதுக்க வேண்டும்,' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மா.கம்யூ., வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் சாமிநாதன் நன்றி கூறினார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி