உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அத்தியாவசியப் பொருட்களை தடுக்கக்கூடாது லாரி உரிமையாளர்களுக்கு வலியுறுத்தல்

அத்தியாவசியப் பொருட்களை தடுக்கக்கூடாது லாரி உரிமையாளர்களுக்கு வலியுறுத்தல்

திருப்பூர் : 'லாரி உரிமையாளர்கள் நாளை துவங்கும் வேலைநிறுத்தப் போராட்டத்தின் போது, அத்தியாவசியப் பொருட்களை தடை செய்யக்கூடாது,' என்று மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர். லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகளுடன் கலெக்டர் மதிவாணன் நேற்று ஆலோசனை நடத்தினார். திருப்பூர் சங்க தலைவர் ராமசாமி, தாராபுரம் சங்க தலைவர் சதாசிவம், திருப்பூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ரஜினிகாந்த், டி.எஸ்.பி., ராஜாராம், தாசில்தார் சந்தியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.'வேலை நிறுத்தப் போராட்டத்தின் போது, சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படாத வகையில், லாரி உரிமையாளர்கள் நடந்து கொள்ள வேண்டும். பொதுமக்களின் அத்தியாவசியத் தேவையான பால், குடிநீர், ரேஷன் பொருட்கள் கொண்டு செல்லும் லாரிகள், பெட்ரோல், டீசல் டேங்கர் லாரிகளை தடுக்கக் கூடாது,' என, கலெக்டர் மதிவாணன் தெரிவித்தார்.பள்ளிகளில் வகுப்பு துவங்கியதா : கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வுதிருப்பூர் : சமச்சீர் பாடத்திட்ட புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு, வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளனவா என, கல்வி துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.சுப்ரீம் கோர்ட் உத்தரவை தொடர்ந்து உடனடியாக சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள 159 அரசு, அரசு உதவி பெறும், மாநகராட்சி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், 1,225 தொடக்க, நடுநிலை பள்ளிகளில் உள்ள ஒரு லட்சத்து 22 ஆயிரம் மாணவர்களுக்கு புத்தகம் வழங்கப்பட்டுள்ளது.அனைத்து மாணவர்களுக்கும் புத்தகம் வழங்கப் பட்டுள்ளதா; புத்தகத்தில் நீக்க வேண்டிய பகுதிகள் நீக்கப்பட்டுள்ளனவா; வகுப்புகள் நடத்தப்பட்டனவா என்பதை, கல்வி துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன் உடுமலை பகுதியிலும், மாவட்ட கல்வி அலுவலர் சுப்ரமணியம் வெள்ளகோவில், காங்கயம் ஆகிய பகுதியிலும், தொடக்கக்கல்வி அலுவலர் (பொ) கரோலின், திருப்பூர் பகுதியிலும் ஆய்வு மேற்கொண்டனர். உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள், அந்தந்த ஒன்றியங்களில் ஆய்வில் ஈடுபட்டனர்.நிதிவசதியில்லாததால் கோவில் மேம்பாட்டு பணியில் சிக்கல்உடுமலை : உடுமலை மலை மீதுள்ள பெருமாள் கோவிலில், போதிய நிதி வசதியில்லாததால், மேம்பாட்டுப்பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.உடுமலை அருகேயுள்ள தும்பலபட்டி கிராமத்திலிருந்து 2 கி.மீ., தூரத்தில், 900 அடி உயரத்தில் மலை உச்சியில், பழமை வாய்ந்த சஞ்சீவிராய பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் சஞ்சீவிராய பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் சிலைகள் உள்ளன. சுண்ணாம்பு கலவை கலந்த செங்கற்களை கொண்டு கோவில் அமைக்கப்பட்டுள்ளது.பழமையான தோற்றத்தில் காட்சியளிக்கும் கோவிலில், பராமரிப்பில்லாததால், சுற்றுச்சுவர்கள் கீழே விழுந்தன. இதனால், கோவிலை புனரமைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்தது. கோவில் மேற்கூரைகள் சேதமடைந்துள்ளதால், தென்னங்கீற்று அமைக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. பொதுமக்களின் ஒத்துழைப்போடு, கோவிலில் சனிக்கிழமைகளில், காலை 7.00 மணிமுதல் 9.00 மணிவரை பூஜையும், மார்கழி மாத பூஜைகளும் நடக்கிறது. இந்நிலையில், பொதுமக்கள் நிதி வசூலித்து கடந்தாண்டு மலை மீது கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தினர். தற்போது கோவிலில், மேம்பாட்டுப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மலைமீது பக்தர்கள் சென்று வரும் வகையில், படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. படிக்கட்டுகளின் இருபுறமும் கம்பிகளும் அமைக்கப்பட்டு வருகிறது. வளர்ச்சிப்பணிகளுக்கு போதிய நிதியில்லாததால் பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.பொது மக்கள் கூறுகையில்,' பழமை வாய்ந்த சஞ்சீவிராயப்பெருமாள் கோவில் 12 லட்சம் ரூபாய் செலவில் திருப்பணிகள் நிறைவடைந்துள்ளது. தற்போது கோவிலில், மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில், வளர்ச்சிப்பணிகளை தொடர்ந்து மேற்கொள்வதற்கு போதிய நிதியில்லை. எனவே, நிதி உதவி செய்தால் மற்ற பணிகளை மேற்கொள்ள முடியும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை