உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உள்ளாட்சி தேர்தலுக்கு ஓட்டுச்சாவடிகளை தயார்படுத்த மாவட்டத்தில் 2,869 கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டி

உள்ளாட்சி தேர்தலுக்கு ஓட்டுச்சாவடிகளை தயார்படுத்த மாவட்டத்தில் 2,869 கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டி

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 2,869 கவுன்சிலர் பதவியிடங்களுக்கு தேர்தல் நடக்கிறது; வாக்காளர் பட்டியல் மற்றும் ஓட்டுச்சாவடிகள் தயார்படுத்தும் பணியில் தேர்தல் பிரிவு அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில் தற்போதைய நிலவரப்பட்டி மொத்தம் 14, 52, 260 வாக்காளர்கள் உள்ளனர்; ஓட்டுச் சாவடிகள் குறித்த விவரங்கள் பெறும் பணியும் நடக்கிறது. உள்ளாட்சி தேர்தல் என்பதால், ஓட்டுச் சாவடிகள் தலா 400 ஓட்டுகள் என்ற அளவில் வார்டுவாரியாக பிரிக்கப்படும். அதன்படி, ஓட்டுச் சாவடிகளின் எண்ணிக்கை கடந்த சட்டசபை தேர்தலை விட அதிகரிக்கும்; சட்டசபை தேர்தலின் போது ஏறத்தாழ 1,200 ஓட்டுகள் என்ற அளவில் ஒரு ஓட்டுச் சாவடி இருந்தது. தற்போது இதன் எண்ணிக்கை மூன்றில் இரண்டு பங்கு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. மாவட்டத்தில் திருப்பூர் மட்டுமே மாநகராட்சியாக உள்ளது. தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ள மாநகராட்சி எல்லையில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. புதிதாக மாவட்ட ஊராட்சி அமைய உள்ளது. இதில் மொத்தம் 17 கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் உள்ள 3 நகராட்சிகளில் காங்கயத்தில் 18, தாராபுரத்தில் 30 மற்றும் உடுமலையில் 33 கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். மூன்றாம் நிலை நகராட்சியான பல்லடத்தில் 18 மற்றும் வெள்ளகோவிலில் 21 கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.ஊராட்சி ஒன்றியங்களில் திருப்பூர் 8, அவிநாசி 19, பல்லடம், குடிமங்கலம் மற்றும் பொங்கலூர் தலா 13, தாராபுரம் மற்றும் ஊத்துக்குளியில் தலா 12, உடுமலை 26, மடத்துக்குளம் மற்றும் வெள்ளகோவில் தலா 9, காங்கயம் 11, குண்டடம் 15 மற்றும் மூலனூரில் 10 என மொத்தம் 170 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியிடங்கள் உள்ளன.மாவட்டத்தில் உள்ள 16 பேரூராட்சிகளில் மொத்தம் 246 கவுன்சிலர் பதவியிடங்கள் உள்ளன. அவிநாசி, குளத்துப் பாளையம், மற்றும் மடத்துக்குளம் பேரூராட்சிகளில் தலா 15 மற்றும் கன்னிவாடியில் 12 வார்டுகளும் உள்ளன. இது தவிர பூண்டி, சங்கராமநல்லூர், தளி, சின்னக்காம்பாளையம், ஊத்துக்குளி, சாமளாபுரம், உத்தராபதி, முத்தூர், குமரலிங்கம், கணியூர், மூலனூர் மற்றும் குன்னத்தூர் ஆகியவற்றில் தலா 15 வார்டுகள் உள்ளன.ஊராட்சிகள் மொத்தம் 265 உள்ளன. இவற்றில் மொத்தம் 2,295 வார்டுகளுக்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தம் 2,869 கவுன்சிலர்களுக்கான தேர்தல் நடக்க உள்ளது. ஒரு மாநகராட்சி மேயர், 5 நகராட்சி தலைவர்கள், 16 பேரூராட்சி தலைவர்கள், 13 ஒன்றிய குழு தலைவர்கள், ஒரு மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் 265 ஊராட்சி தலைவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை