உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு அலுவலகங்கள் "வெறிச்

அரசு அலுவலகங்கள் "வெறிச்

திருப்பூர் : விடுமுறை காரணமாக அரசு அலுவலகங்கள் நேற்று வெறிச்சோடி காணப்பட்டன.நேற்று ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு அரசு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால் அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசு துறை அலுவலகங்கள், கோர்ட், வங்கிகள், தபால் அலுவலகங்கள் மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் ஆகியவை இயங்கவில்லை. கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், ஆர்.டி.ஓ., அலுவலகம், கோர்ட் வளாகம் போன்ற பகுதிகளில் மக்கள் நடமாட்டமின்றி காட்சியளித்தது.கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சில பிரிவுகளில் இரண்டொரு அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் மட்டும் நேற்று இருந்தனர். அவர்கள் தங்களின் நிலுவை கோப்புகள் பார்வையிடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர். தாலுகா அலுவலகத்தில் ரேஷன் கார்டு மற்றும் சான்றிதழ்கள் பெற விண்ணப்பிக்க நூற்றுக்கணக்கானோர் வந்து செல்வர். ஆனால், அரசு விடுமுறை என்பதால் யாரும் வரவில்லை. இதனால் அந்த அலுவலக வளாகங்கள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடியது; விநாயகர் சதுர்த்தியான இன்றும் அரசு விடுமுறை என்பதால் இந்நிலை நீடிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ