உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பெண்ணிடம் நகை பறித்த திருடர்களை துரத்திய இளைஞரை தாக்கி விட்டு ஓட்டம்

பெண்ணிடம் நகை பறித்த திருடர்களை துரத்திய இளைஞரை தாக்கி விட்டு ஓட்டம்

உடுமலை : பெண்ணிடமிருந்து நகைகளை பறித்து சென்ற திருடர்கள்; பின்னால் துரத்தி வந்த இளைஞரை கத்தியால் தாக்கி விட்டு தப்பியோடிய சம்பவம் உடுமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உடுமலை அருகே கோலார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி பேபி(49). தனது மகளின் படிப்பு சம்மந்தமாக உடுமலை காந்தி நகர் பகுதியில் வசிக்கும் தனியார் கல்லூரி பேராசிரியர் வீட்டிற்கு வந்துள்ளார்.பேராசிரியர் வீட்டிலிருந்து இரவு 8.15 மணிக்கு திரும்பி அண்ணா குடியிருப்பு பஸ் ஸ்டாப்பிற்கு பேபி நடந்து வந்துள்ளார். அப்போது, மலையப்பகவுண்டர் லே-அவுட் ரோடு பிரியும் இடத்தில் இரண்டு பேர் இருட்டில் பைக்குடன் நின்று கொண்டிருந்தனர். அதில் ஒரு நபர் பேபி மீது மோதுவது போல் வந்து கழுத்தில் அணிந்திருந்த இரண்டு நகைகளை திடீரென இழுத்துள்ளார். இதில், அவர் அணிந்திருந்த 1 பவுன் செயின் மற்றும் 4 பவுன் செயின் அறுந்தது.திருடனிடமிருந்து செயினை மீண்டும் பிடுங்க முயற்சி செய்ததில், ஒரு பவுன் செயின் மட்டும் பேபியின் கைக்கு கிடைத்தது. அதிர்ச்சியில் பேபி சத்தமிட்ட போது அருகிலிருந்த தெருவிலிருந்து தனியார் பால் பண்ணையில் பணியாற்றும் விஜய்அமிர்தராஜ்(24) ஒடி வந்துள்ளார். இவரை கண்டதும் திருடர்கள் பைக்கில் ஏறி தப்பி ஓடியுள்ளனர்.விஜய் அமிர்தராஜ் மற்றும் அப்பகுதியை சேர்ந்த சிலர் திருடர்களை பைக்கில் துரத்தினர். இந்து நகர் பகுதியிலுள்ள ஒரு குறுகிய சந்தில் சென்ற போது வழித்தடம் இல்லாமல் திருடர்கள் சுவற்றில் மோதி பைக்கிலிருந்து கீழே விழுந்தனர். இதனையடுத்து, விஜய்அமிர்தராஜ் மற்றும் மற்றொரு நபர் திருடர்களை வளைத்து பிடித்தனர். அப்போது,ஒரு திருடன் திடீரென கத்தியை உருவி துரத்தியவர்களை மிரட்டியுள்ளான். தைரியமாக அருகில் சென்ற விஜய்அமிர்தராஜை திருடன் கத்தியால் தாக்கியதில் அவரது முகத்தில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து இரண்டு திருடர்களும் தப்பியோடினர். உடுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை