உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்ரீபாலசாஸ்தா ஐயப்பன் கோவிலில் திருவிளக்கு பூஜை

ஸ்ரீபாலசாஸ்தா ஐயப்பன் கோவிலில் திருவிளக்கு பூஜை

அவிநாசி;சேவூரில் உள்ள ஸ்ரீ பால சாஸ்தா ஐயப்பன் கோவிலில் ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்ப டிரஸ்ட் பக்தர்கள் சார்பில், 32ம் ஆண்டு திருவிளக்குபூஜை நடைபெற்றது.நேற்று முன்தினம் காலைகணபதி ஹோமம், ருத்ர மஹன்யாச ஹோமம், சாஸ்தா ஹோமம் உள்ளிட்டவைகளுடன் அஷ்டாபிஷேகம், மஹா தீபாராதனை நடைபெற்றது. மாலையில், 300க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து, ஐயப்ப சுவாமிக்கு கூட்டு பஜனை நடைபெற்றது.அதன்பின், ஐயப்பன் உற்சவம் சிறப்பு அலங்காரத்தில் ஜண்டை மேளத்துடன் திருவீதி உலா நடைபெற்றது. விழாவில், பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பா டிரஸ்ட் குருசாமி ஈஸ்வரமூர்த்தி தலைமையில், நிர்வாகிகள், உறுப்பினர்கள் மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !