மேலும் செய்திகள்
எம்.எல்.ஏ., மறைவுக்கு கட்சியினர் அஞ்சலி
24-Jun-2025
அவிநாசி; கணவர் வீட்டாரின் வரதட்சணை கொடுமையால் திருமணமான இரண்டு மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவிற்கு பல்வேறு சமூக அமைப்பினரின் சார்பில், அஞ்சலி செலுத்தப்பட்டது.அவிநாசி, கைகாட்டிப்புதுார் பகுதியை சேர்ந்த ரிதன்யா, 27. திருமணமான 78 நாட்களில் கணவர் வீட்டாரின் வரதட்சனை கொடுமை காரணமாக தனது தந்தைக்கு ஆடியோ மெசேஜ் அனுப்பி விட்டு, கடந்த 28ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அதில் அவர் பேசிய ஆடியோ பரவி, தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரிதன்யாவின் உயிரிழப்புக்கு காரணமான கணவர், மாமனார், மாமியார் ஆகியோருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். ஜாமினில் வெளியே விடக்கூடாது என கடும் கண்டனங்கள் எழுந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=18g0n6pp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனை தொடர்ந்து, அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் முன் நேற்று மாலை அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதில், அவிநாசி அனைத்து வணிகர் சங்கம் தலைமையில் தலைவர் கார்த்திகேயன், அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் முத்துக்குமரன், அனைத்து ஹோட்டல் சங்க நிர்வாகி சீதாராம் செந்தில்குமார், மளிகை கடை சங்க தலைவர் சுந்தரவடிவேல், நல்லது நண்பர்கள் அறக்கட்டளை தலைவர் ரவிக்குமார், கிராமிய மக்கள் இயக்கம் சம்பத் குமார், களம் அறக்கட்டளை சதீஷ்குமார், தனசேகரன் உட்பட பலர் பேசினர்.நிகழ்ச்சியில், சமூக நல அமைப்பினர், அனைத்து கட்சியினர், தன்னார்வலர்கள், பெண்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ரிதன்யாவின் படத்துக்கு மலர்களை துாவி அஞ்சலி செலுத்தினர்.
24-Jun-2025