உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  பள்ளி அருகே அச்சுறுத்தும் தொட்டி: பராமரிக்க மக்கள் வலியுறுத்தல்

 பள்ளி அருகே அச்சுறுத்தும் தொட்டி: பராமரிக்க மக்கள் வலியுறுத்தல்

உடுமலை: உடுமலை ஒன்றியம், கண்ணமநாயக்கனுார் கிராமத்தில், 10 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். கிராமத்துக்கு கூட்டுக்குடிநீர் திட்டத்தின் வாயிலாக குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதற்காக, கிராமத்திலுள்ள அரசுப்பள்ளி அருகே கட்டப்பட்ட மேல்நிலைத்தொட்டி, பராமரிப்பு இல்லாமல், ஆங்காங்கே இடிந்து வருகிறது. துாண் மற்றும் மேற்பகுதியில், விரிசல் விட்டு, அச்சறுத்தும் வகையில் காணப்படுகிறது. அருகிலேயே பள்ளி இருப்பதால், மாணவர்கள் பாதுகாப்பு கருதி, உடனடியாக மேல்நிலைத்தொட்டியை புதுப்பிக்க, உடுமலை ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கண்ணமநாயக்கனுார் கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ