உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காஷ்மீரில் பலியானவர்களுக்கு திருப்பூர் கேரளா கிளப் அஞ்சலி

காஷ்மீரில் பலியானவர்களுக்கு திருப்பூர் கேரளா கிளப் அஞ்சலி

திருப்பூர்: திருப்பூர் கேரளா கிளப் சார்பில், ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. கேரளா கிளப் அலுவலகத்தில், பலியானவர்கள் ஆன்மா சாந்திபெற வேண்டி, மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து, கூட்டு பிரார்த்தனை செய்து, அஞ்சலி செய்யப்பட்டது. தாக்குதலில் பலியான உயிர்களுக்கு அஞ்சலி செலுத்திய நிர்வாகிகள், பயங்கரவாதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர். அஞ்சலி நிகழ்ச்சியில், திருப்பூர் கேரளா கிளப் தலைவர் ஸ்ரீகாந்த், பொதுசெயலாளர் சச்சிதானந்தம், பொருளாளர் ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை