உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அத்திக்கடவு திட்டம் "மிஸ்சிங் அவிநாசி விவசாயிகள் ஏமாற்றம்

அத்திக்கடவு திட்டம் "மிஸ்சிங் அவிநாசி விவசாயிகள் ஏமாற்றம்

அவிநாசி : வழக்கம்போல் இந்தாண்டு பட்ஜெட்டிலும், அவிநாசி - அத்திக்கடவு திட்டத்துக்கான அறிவிப்பு இல்லாததால், விவசாயி களும், பொதுமக்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் பவானிசாகர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை, கால்வாய் மூலம் குளம், குட்டைகளுக்கு நீர் நிரப்பி, நிலத்தடி நீரை உயர்த்துவதே, அவிநாசி - அத்திக்கடவு திட்டம். கடந்த 45 ஆண்டாக, அவிநாசி, அன்னூர், திருப்பூர் வடக்கு, குன்னத்தூர், பெருந்துறை உள்ளிட்ட 10 ஒன்றிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், இத்திட்டத்தை நிறைவேற்ற குரல் கொடுத்து வருகின்றனர்.ஒவ்வொரு தேர்தலின்போது, வாக்குறுதி யாக அளிக்கப்படும் இத்திட்டம், அதன்பின் காற்றில் கரைந்து விடும். இந்தாண்டு பட்ஜெட்டிலும், வழக்கம்போல் அத்திக்கடவு திட்டம் இடம் பெறவில்லை. எப்படியாவது இந்தாண்டு அறிவிக்கப்பட்டு விடும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது; ஆனால், மீண்டும் கிடப்பில் போடப் பட்டுள்ளது ஏமாற்றத்தை தந்துள்ளது. 10 ஒன்றியங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கவலை அடைந்துள்ளனர்.திருப்பூர் மாவட்ட பாரதிய கிஸான் சங்க தலைவர் வேலுசாமி கூறியதாவது:ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட்டிலும் அத்திட்டத்தை எதிர்பார்ப்பது வழக்கம். தேர்தல் பிரசாரத்தின்போது மறக்காமல் அனைத்து தலைவர்களும் 'வாக்குறுதி' அளிக்கின்றனர். அடுத்த சில மாதங்களில், ஆய்வு நடத்துகிறோம் என்கின்றனர். அதைத் தொடர்ந்து, விவசாயிகளிடம் கருத்து கேட்டு முடிவு செய்யப்படும் என்கின்றனர். இப்போது பார்த்தால் வழக்கம்போல கண் துடைப்பாகி விட்டது. ஒவ்வொரு ஆண்டும் திட்டம் வரும் என்று நம்பி, விவசாயிகள் வீணாகி விட்டனர்.அவிநாசி உள்ளிட்ட 10 ஒன்றியங்களில், நிலத்தடி நீர் மட்டம் வெகு ஆழத்துக்கு சென்று விட்டது. நாள் முழுவதும் மோட்டார் ஓடினால், ஒரு ஏக்கருக்கு கூட, தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டுள் ளது. அவிநாசி வட்டார விவசாயிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்ற வேண்டுகிறோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி