உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பூண்டியில் குழாய் உடைப்பு குடிநீர் வினியோகம் பாதிப்பு

பூண்டியில் குழாய் உடைப்பு குடிநீர் வினியோகம் பாதிப்பு

அவிநாசி:திருமுருகன்பூண்டியில் ஏற்பட்ட குழாய் உடைப்பு காரணமாக, குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது.மேட்டுப்பாளையத்தில் இருந்து திருப்பூருக்கு இரண்டாவது குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. நேற்று அதிகாலை, திருமுருகன்பூண்டியில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் ரோட்டில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. பேரூராட்சி நிர்வாகத்தினர், திருப்பூர் குடிநீர் வடிகால் வாரியத்துக்கு தகவல் அளித்தனர்.பூண்டிக்கு சென்று குழாய் உடைப்பை பார்வையிட்ட அதிகாரிகள், மேட்டுப்பாளையத்துக்கு தகவல் அளித்து தண்ணீர் சப்ளையை நிறுத்தினர். இருப்பினும் நேற்று பிற்பகல் 3.00 மணி வரை தண்ணீர் தொடர்ந்து வீணாகி கொண்டிருந்தது.குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் சசீதரன் கூறியதாவது:இரண்டாவது திட்ட குழாயில் திடீரென்று உடைப்பு ஏற்பட்டதால், தண்ணீர் வெளியேறியது. உடனடியாக தண்ணீரை நிறுத்தி விட்டோம். இன்று (நேற்று) குழாய் உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம். நாளை (இன்று) வழக்கம்போல் குடிநீர் சப்ளை செய்யப்படும், என்றார். குழாய் உடைப்பு காரணமாக, திருமுருகன்பூண்டி பேரூராட்சி, 15 வேலம்பாளையம் நகராட்சி மற்றும் திருப்பூர் மாநகராட்சியில் நேற்று குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை