உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருப்பூர் தமிழ்ச்சங்க இலக்கிய விருது வழங்கும் விழா

திருப்பூர் தமிழ்ச்சங்க இலக்கிய விருது வழங்கும் விழா

திருப்பூர்; திருப்பூர் தமிழ்ச்சங்கத்தின், 33வது ஆண்டு விழா மற்றும் இலக்கிய விருதுகள் 2024 பரிசளிப்பு விழா, காங்கயம் ரோடு, வேலன் ஓட்டல் வளாகத்தில் உள்ள புத்தக திருவிழா அரங்கில் நேற்று நடந்தது.விழாவுக்கு தமிழ்ச் சங்க தலைவர் முருகநாதன் தலைமை வகித்தார். செயலாளர் மோகன் கார்த்திக் வரவேற்றார். 'தமிழ் இலக்கியத்தில் மருத்துவம்' எனும் தலைப்பில், டாக்டர் பாலமுருகன் சிறப்புரை ஆற்றினார். கட்டுரை பிரிவில் 'நினைவுகளின் நிலவெளி' புத்தகம் எழுதிய செந்தி, கவிதை பிரிவில் 'சங்க இலக்கியச் சோலை' புத்தகம் எழுதிய கதிரேசன், 'அரிக்கன் விளக்கு' நாவல் எழுதிய காதர், 'உயிர்தேடும் உள்ளங்கள்' நாவல் எழுதிய ஆதலையூர் சூரியகுமார், 'தனித்த பறவையின் சலனங்கள்' சிறுகதை தொகுப்பு எழுதிய உஷாதீபன், 'திருப்பூர் வரலாறு' புத்தகம் எழுதிய கவிஞர் சிவதாசன் ஆகியோருக்கு இலக்கிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. பொருளாளர் முருகேசன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை