உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஒரே நிலைப்பாட்டில் தொழிலை நடத்தணும்

ஒரே நிலைப்பாட்டில் தொழிலை நடத்தணும்

திருப்பூர் : 'சாய ஆலை உரிமையாளர்கள், ஒரே நிலைப்பாட்டுடன் இருந்து சாயத்தொழிலை சிறப்பாக நடத்த வேண்டும்,' என, திருப்பூர் பாதுகாப்பு மகளிர் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.சாய ஆலைகளை திறந்து, மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என திருப்பூர் பாதுகாப்பு மகளிர் இயக்கம் உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது. சாயக்கழிவு நீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், தொழில்நுட்ப மேம்பாட்டுக்காக தமிழக அரசு 200 கோடி ரூபாய் வட்டியில்லா கடன் வழங்குவதாக அறிவித்துள்ளதற்கு, மகளிர் இயக்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.திருப்பூர் பாதுகாப்பு மகளிர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜாத்தி கூறுகையில்,''சாயத்தொழில் பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்த, தமிழக அரசு முன்வந்துள்ளது. தொழில்நுட்ப மேம்பாட்டுக்காக 200 கோடி ரூபாய் வட்டியில்லா கடன் வழங்குவதாக முதல்வர் அறிவித்துள்ளதால், பொருளாதார சிக்கல் தீர்க்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில், சுத்திகரிப்பு தொழில்நுட்பத்தை மேம்படுத்த அனைத்து உதவிகளையும் அரசு செய்யுமென நம்புகிறோம்.சாய ஆலை உரிமையாளர்கள் ஒரே நிலைப்பாட்டுடன் இருந்து, தொழிலை சிறப்பாக நடத்த வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி