உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கால்நடை மருந்தகங்களில் மருந்து இருப்பு கணக்கெடுப்பு

கால்நடை மருந்தகங்களில் மருந்து இருப்பு கணக்கெடுப்பு

திருப்பூர் : மாநிலம் முழுவதும் கால்நடை மருந்தகங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ள மருந்து, மாத்திரை விவரங்களை கால்நடை துறையினர் கணக்கெடுத்து வருகின்றனர். ஏழை மற்றும் விதவை பெண்களுக்கு இலவச வெள்ளாடு மற்றும் மாடு வழங்கும் திட்டம், வரும் செப்., 15ல் துவக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக, வெளிமாநிலங்களில் இருந்து வாங்கலாமா? பண்ணையாளர்களிடம் இருந்து மொத்த கொள்முதல் செய்யலாமா? இரண்டாம், மூன்றாம் கட்டமாக எத்தனை வெள்ளாடுகள் வழங்குவது என்பது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது.இத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக அரசு தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக, வெள்ளாடுகளுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டால் எப்படி சமாளிப்பது? எவ்வாறு சிகிச்சை மேற்கொள்வது? பயனாளிகளுக்கு தொடர்ந்து வழங்குவது எப்படி என ஆலோசித்து வருகிறது. விரைவில் 2011-12ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட்டில் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில், தற்போது மாநிலத்தில் எத்தனை கால்நடை மருந்தகங்கள் உள்ளன; தற்போதைக்கு எவ்வளவு 'டோஸ்' மருந்து 'ஸ்டாக்' வைக்கப்பட்டுள்ளது. வெள்ளாடு வழங்கும் பட்சத்தில் மேலும் எவ்வளவு தடுப்பு மருந்து வாங்க வேண்டிய அவசியம் வரும் என்று கணக்கெடுத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை