உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பனியன் தொழிலாளர் ஆலோசனை கூட்டம்

பனியன் தொழிலாளர் ஆலோசனை கூட்டம்

திருப்பூர் : பனியன் அண்ணா தொழிலாளர் சங்க ஆலோசனை கூட்டம், திருப்பூரில் நடந்தது. பனியன் சங்க துணை தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார்; மாவட்ட அண்ணா தொழிற்சங்க இணை செயலாளர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில், 'திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள பனியன் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். தொழிற்சங்க சட்டத்துக்கு உட்பட்டு கிளை சங்கங்களை உருவாக்குவதற்கு பனியன் தொழிற்சங்க நிர்வாகிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். தொழிலாளர்களுக்கு நல வாரிய பயன்கள் பெற்றுத்தர வேண்டும்,' என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பனியன் தொழிலாளர் சங்க செயலாளர் குணசேகரன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணப்பன் ஆகியோர், சங்க வளர்ச்சி, புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசனை வழங்கினர். தொழிலாளர் சங்க தலைவர் ராஜேஸ் கண்ணா, துணை தலைவர்கள் சையத்அஸ்ரத், வெங்கடேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி