உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பள்ளிகளில் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்க காலக்கெடு

பள்ளிகளில் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்க காலக்கெடு

திருப்பூர்:பள்ளி மாணவர்களுக்கு ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட பலவித சான்றிதழ்களை, பள்ளி மூலம் நேரடியாகப் பெற்று வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம், திருப்பூரில் நேற்று நடந்தது.பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி மூலம் வருவாய்த்துறையினரிடம் இருந்து பெறப்படும் சான்றிதழ்களை பெற்று வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் மதிவாணன் தலைமை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் மோகன்தாஸ், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் நூர்மாலிக் முன்னிலை வகித்தனர்.பள்ளி இறுதி வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு, உயர்படிப்புக்குச் சேர தேவைப்படும் ஜாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு வகையான சான்றி தழ்களை பள்ளி நிர்வாகம் மூலம், வருவாய்த்துறையிடம் இருந்து பெற்று நேரடியாக வழங்கும் முறை குறித்து விவாதிக்கப்பட்டது.இதற்கு, திருப்பூர் மாவட்டத்தில் 15,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும், தங்கள் பள்ளியில் உள்ள 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களிடம் விண்ணப்பங்களை பெற்று சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும். வரும் செப்., 30க்குள் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற வேண்டும். முதன்மை கல்வி அலுவலர் மூலம் அக்., 1 முதல் 15க்குள் பரிசீலனை செய்து, அடுத்த ஆண்டு ஜன., முதல் வாரம் சான்றிதழ் வழங்கப்படும்.இந்நடைமுறையால், பொதுத்தேர்வு முடிந்ததும், கல்லூரிகளில் சேர சான்றிதழ் பெற மாணவர்கள் சிரமப்பட வேண்டிய நிலை தவிர்க்கப்படும். திருப்பூர் மாவட்டத்தில் பயிலும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு உரிய விண்ணப்பம் பெற்று, சம்பந்தப்பட்ட ஆர்.டி.ஓ., மூலம், மாணவரின் சொந்த மாவட்டத்தில் உரிய அலுவலரிடம் சான்றிதழ் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ