உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வி.எச்.பி., சார்பில் கிருஷ்ண ஜெயந்தி

வி.எச்.பி., சார்பில் கிருஷ்ண ஜெயந்தி

திருப்பூர் : விசுவ இந்து பரிசத் சார்பில் திருப்பூரில் வரும் 22ல் நடக்கும் கிருஷ்ண ஜெயந்தி விழா பொதுக்கூட்டத்தில், வி.எச்.பி., அகில உலக செயல் தலைவர் வேதாந்தம், ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியசாமி பங்கேற்கின்றனர்.வி.எச்.பி., திருப்பூர் கோட்ட செயலாளர் நாச்சிமுத்து, மாவட்ட தலைவர் தயாளமூர்த்தி, பஜ்ரங்தள் மாவட்ட அமைப்பாளர் விஸ்வநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:வி.எச்.பி., சார்பில் வரும் 21, 22ம் தேதிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. திருப்பூர் நகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளில் 41 இடங்களில், 21ம் தேதி கிருஷ்ணர் சிலைகள் வைக்கப்படும்; 22ம் தேதி, அச்சிலைகள் அனைத்தும் ராயபுரத்தில் உள்ள கிருஷ்ணர் கோவிலுக்கு கொண்டு வரப்படும். அன்று மாலை 5.00 மணிக்கு கிருஷ்ணர் சிலைகளுடன் கோவிலிலிருந்து ஆன்மிக ஊர்வலம் புறப்படும்.மாநில கபாடி கழக தலைவர் சோலைராஜா, ஊர்வலத்தை துவக்கி வைக்கிறார். கோர்ட் வீதி, ஸ்டேட் பேங்க் ரோடு, ரயில்வே மேம்பாலம், அவிநாசி ரோடு, மில்லர் ஸ்டாப் வழியாக ஓம்சக்தி கோவில் வீதியை கடந்து, சின்னச்சாமி அம்மாள் பள்ளி அருகில் ஊர்வலம் முடிவடையும். ஊர்வலத்தில், கிருஷ்ணர், ராதை வேடமணிந்த குழந்தைகளும், நூற்றுக்கணக்கான பெண்களும் பங்கேற்க உள்ளனர்.அப்பகுதியில் இரவு 7.00 மணிக்கு, கிருஷ்ண ஜெயந்தி விழா பொதுக்கூட்டம் நடக்கிறது; வி.எச்.பி., அகில உலக செயல் தலைவர் வேதாந்தம், ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியசாமி பங்கேற்கின்றனர். கிருஷ்ணர் சிலைகள் வைக்கப்படும் இடங்களில், சறுக்கு மரம் ஏறுதல், குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி