உள்ளூர் செய்திகள்

மா.கம்யூ., கூட்டம்

திருப்பூர் : மா.கம்யூ., சேடர்பாளையம் கிளை மாநாடு பெருமாள் தலைமையில் நடந்தது. மாவட்ட குழு நிர்வாகிகள் ராமமூர்த்தி, நந்தகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். புதிய செயலாளராக மகேந்திரன் தேர்வு செய்யப்பட்டார்.'சேடர்பாளையம், எஸ்.ஆர்.வி.,நகர், குருவாயூரப்பன் நகர், மூகாம்பிகை நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளை உள்ளடக்கிய முழு நேர ரேஷன் கடை அமைக்க வேண்டும். தெருவிளக்கு, கழிப்பிடம் அமைக்க வேண்டும்.'நியூ குருவாயூரப்பன் நகரில் உள்ள போர்வெல் தண்ணீர் மாசடைந்துள்ளதால், குடித்த நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 'இப்பிரச்னைகளுக்கு தீர்வு காணாவிட்டால், உண்ணாவிரத போராட்டம் நடத்துவது,' என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை