உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விநாயகர் சதுர்த்தி ஆலோசனை

விநாயகர் சதுர்த்தி ஆலோசனை

திருப்பூர் : விநாயகர் சதுர்த்தி விழா குறித்த திருப்பூர் வடக்கு ஒன்றிய இந்துமுன்னணி ஆலோசனை கூட்டம் புதுபஸ்ஸ்டாண்ட் பகுதியில் நடந்தது.மாவட்ட செயலாளர் சேவுகன் தலைமை வகித்தார். கோவை கோட்ட ஒருங்கிணைப்பாளர் கி÷ஷார் குமார் பேசினார். விநாயகர் சதுர்த்தி தினத்தன்று வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட நூறுக்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டைசெய்து வழிபாடு நடத்துவது என,முடிவானது.ஒன்றிய பொறுப்பாளர்கள் வெங்கடேஷ், ராஜா, அன்பு, வேலுச்சாமி மற்றும் ஊராட்சி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.குன்னத்தூர்: குன்னத்தூர் பேரூராட்சி இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சேவுகன் தலைமை வகித்தார். கூட்டத்தில், குன்னத்தூர் பகுதிக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்வது என, தீர்மானிக்கப்பட்டது. குன்னத்தூர் பேரூராட்சி பொறுப்பாளர்கள் செல்வம், சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ