உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கொலை மிரட்டல் விடுத்த மாணவர்கள் 4 பேர் கைது

கொலை மிரட்டல் விடுத்த மாணவர்கள் 4 பேர் கைது

உடுமலை : உடுமலை அரசு கலைக் கல்லூரி ஜூனியர் மாணவரை அடித்து காயப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்த மூன்றாமாண்டு மாணவர்கள் நான்கு பேரை போலீசார் கைது செய்து, பார்ஸ்டல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.உடுமலை அரசு கலைக்கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கும் மாணவன் சதிஷ்குமார். நேற்று முன்தினம் மதியம் சதிஷ்குமாரின் நண்பன் பெரியசாமி கல்லூரி வளாகத்தில் மூன்றாமாண்டு படிக்கும் மாணவன் இமாம் ஜாபர் சாதிக்குடன் பேசியபடி நின்றுள்ளார்.அப்போது, அங்கு வந்த பெரியசாமியிடம் கையில் வைத்திருக்கும் புத்தகம் குறித்து சதிஷ் கேட்ட போது, இமாம் ஜாபர் சாதிக், சதிஷ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.உடனே, இமாம் ஜாபர் சாதிக் ஜூனியர் மாணவர் தன்னை அவமானப்படுத்தியதாக தெரிவித்து, நண்பர்களை அழைத்துள்ளார். அங்கு வந்த மூன்றாமாண்டு மாணவர்கள் கார்த்திகேயன், விஜயகுமார், கணேசன் ஆகியோர் சதிஷை தாக்கியுள்ளனர்.இதில், தலையில் காயமடைந்த சதிஷ் உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின், உடுமலை போலீசில் புகார் அளித்தார். நேற்று முன்தினம் இரவு கொடுங்காயம் ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் உடுமலை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இமாம் ஜாபர் சாதிக், கார்த்திகேயன், விஜயகுமார், கணேசன் ஆகிய நால்வரையும் உடுமலை போலீசார் நேற்று முன் தினம் இரவு கைது செய்து ஜே.எம்.,1 கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டிடம் ஆஜர்படுத்தினர்.நால்வரையும் பொள் ளாச்சி பார்ஸ்டல் சிறையில் 15 நாள் காவலில் அடைக்கும்படி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ