உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / "எல்.ஐ.சி., வளர பாலிசிதாரர்களே காரணம்

"எல்.ஐ.சி., வளர பாலிசிதாரர்களே காரணம்

திருப்பூர் : எல்.ஐ.சி.,யின் 55வது ஆண்டு விழா, திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் பின்புறமுள்ள அலுவலகத்தில் நேற்று நடந்தது. திருப்பூர் மண்டல மேலாளர் சீனிவாசராவ் தலைமை வகித்தார். ஐ.ஓ.பி., வங்கி உதவி பொது மேலாளர் கிருஷ்ணசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.சீனிவாசராவ் நிருபர்களிடம் கூறியதாவது:கடந்த 1956ல் துவங்கப்பட்ட எல்.ஐ.சி., குறிப்பிட்ட சில காலத்துக்கு பின், அரசின் கட்டுப்பாட்டில் வந்தது. தனியார் நிறுவனங்கள் போட்டி போட்டு வந்தாலும், மக்களிடத்தில் சிறப்பான பெயரை தக்க வைத்துள்ளது; அதற்கு பாலிதாரர்களே சாட்சி.பாலிசி போடுபவர்களில் நூறில் 76 பேர், எல்.ஐ.சி.,யை நாடுகின்றனர். பிரீமியம் செலுத்துபவர்கள் நூறில் 63 சதவீதம் பேர் உள்ளனர். மக்களிடம் பெறும் தொகை பாலம், ரோடு, அரசு நலத்திட்டங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளுக்கு பயன்படுவதே எல்.ஐ.சி., வளர முக்கியக்காரணம்.

கடந்த ஆண்டில் (மார்ச் 09 - ஏப்., 10) ஏழு லட்சத்து 49 ஆயிரத்து 150 லட்சம் கோடி ரூபாய் உள்கட்டமைப்பு வசதிகளுக்காக தரப்பட்டுள்ளது. 55ம் ஆண்டு விழாவை ஒரு வாரம் கொண்டாட முடிவு செய்துள்ளோம். இன்சூரன்ஸ் தினம், ஏஜன்ட்கள் தினம், ஆலோசனை தினம் என ஏழாம் தேதி வரை கொண்டாட முடிவு செய்துள்ளோம்.வரும் 6ம் தேதி சிட்டி யூனியன் வங்கியுடன் இணைந்து குமரன் ரோட்டில் இலவச மருத்துவ முகாம் நடத்துகிறோம். 7ம் தேதி பள்ளி மாணவ, மாணவியருக்கான கட்டுரை போட்டி, எங்கள் அலுவலகத்தில் நடக்கிறது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி