உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்

ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்

உடுமலை : உடுமலை ஆர்.ஜி.எம்., மேல்நிலைப்பள்ளியில், மழலையர் பிரிவு சார்பில், ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் நடந்தது. பள்ளி முதல்வர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். ரம்ஜான் மாதச் சிறப்பு குறித்த ஓவியங்கள், விளம்பர படங்கள் போன்றவற்றால், வகுப்பறையை அலங்கரித்தும், வண்ண வண்ண உடைகள் அணிந்து மாணவர்கள் உற்சாகமாக கொண்டாடினர். இனிப்பு வழங்கப்பட்டது. மழலையர் பிரிவுஒருங்கிணைப்பாளர் வெங்கடஸ்ரீ மற்றும் ஆசிரியர்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை