உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வேட்பு மனு தாக்கல் செய்வது எங்கே?

வேட்பு மனு தாக்கல் செய்வது எங்கே?

திருப்பூர் : திருப்பூர் ஒன்றியத்துக்கும், ஊராட்சி பொறுப்புக் கும் போட்டியிட விரும்புவோர், வேட்பு மனு தாக்கல் செய்யும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில், ஒரு மாவட்ட ஊராட்சி வார்டு; எட்டு ஒன்றிய வார்டுகள்; 13 ஊராட்சி தலைவர் பதவி இடங்கள்; 114 ஊராட்சி வார்டுகள் என 136 பொறுப்புகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. திருப்பூர் ஒன்றியத்துக்கு தேர்தல் நடத்தும் அலுவலராக, ஆர்.டி.ஓ., செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார். 18 பேர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட கவுன்சிலராக போட்டியிட விரும்புவோர், திருப்பூர் ஒன்றிய அலுவலகத்தில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான, மாவட்ட வழங்கல் அதிகாரி ராமமூர்த்தியிடம் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும். ஒன்றிய வார்டுகள்: 1 முதல் 5 வரையிலான ஐந்து வார்டுகளுக்கு, ஒன்றிய பொறியாளர் தர்மலிங்கம், மீதியுள்ள 6 முதல் 8 வரையிலான மூன்று வார்டுகளுக்கு, வட்டார வளர்ச்சி அலுவலர் பூங்கோதை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஒன்றிய கவுன்சிலராக போட்டியிட விரும்புவோர், திருப்பூர் ஒன்றிய அலுவலகத்துக்கு சென்று, சம்பந்தப்பட்ட அதிகாரி களிடம் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும். ஊராட்சி தலைவர்கள்: திருப்பூரில் உள்ள 13 ஊராட்சிகளுக்கு மூன்று உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பட்டம் பாளையம், சொக்கனூர், மேற்குபதி, வள்ளிபுரம், தொரவலூர் ஆகிய ஐந்து ஊராட்சிகளுக்கு, திருப்பூர் துணை தாசில்தார் ராஜகோபால் நியமிக்கப்பட்டுள்ளார்.ஈட்டிவீரம்பாளையம், பெருமாநல்லூர், காளிபாளையம், கணக்கம்பாளையம், பொங்குபாளையம் ஆகிய ஐந்து ஊராட்சிகளுக்கு, திருப்பூர் மண்டல துணை தாசில்தார் சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார். மங்கலம், இடுவாய், முதலிபாளையம் ஆகிய மூன்று ஊராட்சிகளுக்கு, துணை வணிக வரி அலுவலர் திருவேங்கடம் நியமிக்கப்பட்டுள் ளார். ஊராட்சி தலைவராக போட்டியிட விரும்புவோர், திருப்பூர் ஒன்றிய அலுவலகத்துக்கு சென்று, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு தாக்கல் செய்ய வேண்டும். ஊராட்சி வார்டுகள்: ஊராட்சி மன்ற உறுப்பினராக போட்டியிட விரும்புவோர், ஒன்றிய அலுவலகம் செல்ல தேவையில்லை; அந்தந்த ஊராட்சி அலு வலகங்களில் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். அதற்காக, அந்தந்த ஊராட்சிகளில் தலா ஒருவர் வீதம் 13 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்