திருப்பூர் : வடக்கு குறுமைய விளையாட்டு போட்டிகளில், திருப்பூர் சுப்பையா
பள்ளி மாணவ, மாணவியர் வெற்றி பெற்றுள்ளனர்.மெட்ரிக் பள்ளி அளவிலான வடக்கு
குறுமைய விளையாட்டு போட்டி, திருப்பூரில் நடந்தது. 46 பள்ளிகள் பங்கேற்றன.
குழு விளையாட்டு போட்டிகளில் சுப்பையா பள்ளி மாணவ, மாணவியர் சாதனை
புரிந்தனர்.;ஜூனியர் பிரிவு செஸ் முதலிடம். சீனியர் பிரிவு எறிபந்து,
பூப்பந்தாட்டம், வளைபந்து, இறகுபந்து, டென்னிஸ் (ஒற்றையர் மற்றும்
இரட்டையர்) முதலிடம், டேபிள் டென்னிஸ், கேரம் இரண்டாமிடம்.சூப்பர் சீனியர்
பிரிவில் எறிபந்து, பூப்பந்தாட்டம், வளைபந்து (ஒற்றையர் மற்றும் இரட்டையர்
பிரிவு) முதலிடம், டேபிள் டென்னிஸ் இரண்டாமிடம்.தடகளப் போட்டியில் ஜூனியர்
பிரிவில் எட்டாம் வகுப்பு மாணவி ஸ்ரீஹரிணி குண்டு எறிதலில் முதலிடம், ஏழாம் வகுப்பு மாணவி விஜயலட்சுமி மூன்றாமிடம். எட்டாம்
வகுப்பு மாணவி சன்மிதா உயரம் தாண்டுதலில் முதலிடம். சூப்பர் சீனியர் பிரிவு
ஈட்டி எறிதலில் பிளஸ் 2 மாணவி பத்மா பிரியதர்ஷினி முதலிடம். மாணவர்கள்
பிரிவு, கால்பந்து போட்டியில் முதலிடம், செஸ் போட்டியில் முதலிடம்,
எறிபந்து போட்டியில் இரண்டாமிடம். சீனியர் பிரிவு டேபிள் டென்னிஸ்,
வளைபந்து, கேரம் (ஒற்றையர் மற்றும் இரட்டையர்) டென்னிஸ் ஆகியவற்றில்
முதலிடம்; செஸ் போட்டியில் இரண்டாமிடம்.சீனியர் பிரிவு 100 மீட்டர்
ஓட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் இஸ்மாயின் ஷெரீப் மூன்றாமிடம், உயரம்
தாண்டுதலில் பத்தாம் வகுப்பு மாணவன் ஹரிபிரசாத் இரண்டாமிடம். சூப்பர்
சீனியர் பிரிவில் வளைபந்து (ஒற்றையர்), கேரம் (ஒற்றையர் மற்றும் இரட்டையர்)
ஆகியவற்றில் முதலிடம் பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை தாளாளர்
சுகுமாரன், பள்ளி முதல்வர் வினய்குமார், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோர்
பாராட்டினர்.