உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விகாஸ் வித்யாலயா மாணவர்கள் அபாரம்

விகாஸ் வித்யாலயா மாணவர்கள் அபாரம்

திருப்பூர் : மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகளில், திருப்பூர் எம்.எஸ்., நகர் விகாஸ் வித்யாலயா பள்ளி மாணவர்கள் பல்வேறு பரிசுகளை பெற்று சாதனை புரிந்தனர்.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இடையே பல்வேறு போட்டிகள் நடந்தன. இதில், எம்.எஸ்., நகர் விகாஸ் வித்யாலயா பள்ளி மாணவர்கள், ஓவியப்போட்டியில் மாவட்ட அளவில் இரண்டாமிடம், யோகாசன பயிற்சியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றனர்.மாவட்ட அளவிலான நடனப்போட்டியில், இப்பள்ளி மாணவன் பெத்தயா யோகேஸ் முதல் பரிசு பெற்றதோடு, இப்பள்ளியை சேர்ந்த 20 மாணவர்கள் பல்வேறு பரிசுகளை பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை, பள்ளி தாளாளர் ராமசாமி, தலைமை ஆசிரியர் ராஜீவன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ