உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / முதியோர் உதவி தொகை குறைகேட்பு

முதியோர் உதவி தொகை குறைகேட்பு

திருப்பூர் : தபால் துறை மணியார்டர் மூலம் முதியோர் உதவித் தொகை பெறுவோருக்கான குறை தீர்ப்பு கூட்டம், திருப்பூர் மண்டல கண் காணிப்பாளர் தலைமையில் ஒவ்வொரு மாதமும் நடந்து வருகிறது. இம்மாத கூட்டம், வரும் 27ம் தேதி மதியம் 2.30 மணிக்கு, திருப்பூர் தலைமை தபால் அலுவலக முதல் தளத்தில் நடக்கிறது. முதியோர் உதவித் தொகை பெறுவோர், தங்களுக்கு குறை இருந்தால், முழு முகவரி, முதியோர் உதவித்தொகை எண் உள்ளிட்ட அனைத்து தகவல்களுடன் வரும் 25ம் தேதிக்குள், கண்காணிப்பாளர், தபால் துறை திருப்பூர் மண்டல அலுவலகம் என்ற முகவரிக்கு மனுக்களை அனுப்ப வேண்டும். புகார் மனு மீது, 'ஓ.ஏ.பி., எம்.ஓ., அதாலத்' என்று குறிப்பிட வேண்டும். மனுக் களை தபாலில் மட்டுமே அனுப்ப வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ