உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருப்பூர் அணி மீண்டும் அபாரம்

திருப்பூர் அணி மீண்டும் அபாரம்

அணியின் தலைவர்கள், அணி வீரர்களை வழிநடத்துவதோடு, வெற்றிக்கும் வழிவகுப்பவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் தரும் உற்சாகத்தால் அணி வெற்றிபெறுகிறது. கேப்டன் 'கூல்', 'மில்லர்'கள் உருவாக வேண்டும்.திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட் சார்பில், 16 வயதுக்கு உட்பட்டோருக்கான, 10வது ஆண்டு டி.எஸ்.சி., சேலஞ்சர் டிராபி கிரிக்கெட் போட்டி, கடந்த 13ம் தேதி துவங்கியது.முருகம்பாளையம் வயர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில், டாஸ் வென்ற கேரளா திருபுனித்ரா அணி, பேட்டிங்கை தேர்வு செய்து, 30 ஓவரில், ஏழு விக்கெட் இழப்புக்கு, 147 ரன் எடுத்தது. மனோஜ் 57 ரன் எடுத்தார்.இலக்கை விரட்டிய திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட் அணி, 16.2 ஓவரில், விக்கெட் இழப்பின்றி, 148 ரன் எடுத்து வெற்றி பெற்றது. துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய, அர்ஜூன், 67 ரன், ராகவ், 69 ரன் எடுத்து, அணியை வெற்றி பெற செய்தனர். ராகவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.மற்றொரு போட்டியில், சென்னை டான்பாஸ்கோ அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. 30 ஓவர் நிறைவில், எட்டு விக்கெட் இழப்புக்கு 155 ரன் எடுத்தது. அதிகபட்சமாக, சுஜித்ராஜூ, 32 ரன் எடுத்தார். எல்.ஜி.,ஸ் ஹப் ஆப் கிரிக்கெட் அணி, 20.2 ஓவரில், 65 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. டான்பாஸ்கோ அணி பவுலர் ஸ்ரீஜித், ஆறு ஓவரில், பத்து ரன் மட்டும் கொடுத்து, ஐந்து விக்கெட் கைப்பற்றினார். ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். 90 ரன்கள் வித்தியாசத்தில் டான்போஸ்கோ அணி வெற்றியை ருசித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை