உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கோப்பையை தட்டித்துாக்கிய திருப்பூர் அணி

கோப்பையை தட்டித்துாக்கிய திருப்பூர் அணி

திருப்பூர்:திருப்பூரில் நடந்த டி.எஸ்.சி., சேலஞ்சர் டிராபி கோப்பை கிரிக்கெட் போட்டியில், திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட் அணி வென்றது.திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட் சார்பில், 16 வயதுக்கு உட்பட்டோருக்கான, பத்தாம் ஆண்டு டி.எஸ்.சி., சேலஞ்சர் டிராபி கிரிக்கெட் போட்டி முருகம்பாளையத்தில் உள்ள வயர் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த, 13ம் தேதி துவங்கியது.திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட் அகாடமி அணி உள்ளிட்ட, எட்டு அணிகள் பங்கேற்று விளையாடி வந்தது.இறுதி போட்டிக்கு, திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட் அணியும், சென்னை டான்போஸ்கோ அணியும் தகுதி பெற்றது. நேற்று மதியம் நடந்த இறுதி போட்டியில், 'டாஸ்' வென்ற சென்னை அணி முதலில் களமிறங்கியது. 30 ஓவரில், 9 விக்கெட் இழப்புக்கு, 137 ரன்களை எடுத்தது.பின், எளிதான இலக்கை நோக்கி களமிறங்கிய திருப்பூர் அணி, 25.3 ஓவரில், 3 விக்கெட் இழப்புக்கு, 140 ரன் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்று கோப்பையை தட்டி சென்றது.தேவ் அர்ஜூன், 63, நித்திலன், 50 ரன் எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர். முன்னதாக, மூன்றாவது இடத்துக்கான போட்டியில், ஹைதராபாத் கோச்சிங் பியாண்ட் அணியும், கடப்பா ஒய்.எஸ்.ஆர்., கிரிக்கெட் அசோசியேஷன் அணியும் மோதியது. முதலில் ஆடிய ஹைதராபாத் அணி, 25 ஓவரில், 166 ரன் எடுத்தனர்.அடுத்து விளையாடிய கடப்பா அணி, 24.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 150 ரன் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தனர். 16 ரன் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வென்று, மூன்றாமிடம் பிடித்தது.

பரிசளிப்பு விழா

மாலை நடந்த பரிசளிப்பு விழாவில், திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் பவன்குமார், தமிழ்நாடு கிரிக்கெட் அகாடமி இயக்குனர் பிரகாஷ் ஆகியோர் பங்கேற்று வெற்றி பெற்ற திருப்பூர் அணிக்கு கோப்பையை வழங்கினர். போட்டி ஏற்பாடுகளை திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ