உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / புகையிலை ஒழிப்பு கருத்தரங்கம்;  சந்தேகங்களுக்கு விளக்கம்

புகையிலை ஒழிப்பு கருத்தரங்கம்;  சந்தேகங்களுக்கு விளக்கம்

உடுமலை;உடுமலை அடுத்த கொமரலிங்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில், புகையிலை ஒழிப்பு கருத்தரங்கம் நடந்தது.பள்ளித்தலைமையாசிரியர் மாரியப்பன் தலைமை வகித்தார். கொமரலிங்கம் சுகாதார ஆய்வாளர் முரளி, கணியூர் சுகாதார மேற்பார்வையாளர் தாமரைக்கண்ணன், தன்னார்வலர் பிரேம் ஆகியோர் புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசினர்.குறிப்பாக, இதில் புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள், புகையிலை தடை சட்டத்தின்படி அபராதம் மற்றும் தண்டனைகள், புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் சமூக குற்றங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.மாணவ, மாணவியரின் சந்தேகங்களுக்கும் பதில் அளிக்கப்பட்டது. ஆசிரியர்கள் வினிதா, சந்திரகாந்தி, சுகன்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.ஆசிரியர் முத்துக்கருப்பன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை