உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நாளை காதலர் தினம்: ரோஜாக்கள் குவிந்தன

நாளை காதலர் தினம்: ரோஜாக்கள் குவிந்தன

திருப்பூர்:நாளை (14ம் தேதி) காதலர் தினத்தை முன்னிட்டு, விற்பனைக்காக அதிகளவில் ரோஜா பூக்கள், திருப்பூர் பூ மார்க்கெட்டுக்கு தருவிக்கப்பட்டு வருகிறது.பிப்., 14 காதலர் தினத்தன்று வழக்கமான அளவை விட ரோஜா பூ அதிகமாக விற்கும்; முந்தை நாளிலும் (பிப்., 13) விற்பனை அதிகரிக்கும். பத்து முதல், 15 ரூபாய் விற்கப்படும் ஓசூர், பெங்களூரு ரோஜா பூக்கள், இன்று, 20 முதல், 25 ரூபாய்க்கு விற்கப்படும்.'வார விடுமுறை நாட்களில், காதலர் தினம் வந்தால், விற்பனை அதிகரிக்கும். இடை நாள் என்பதால், விற்பனை எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. வழக்கத்தைவிட, 40 சதவீத பூக்களை கூடுதலாக வாங்கி இருப்பு வைத்துள்ளோம். விற்பனை சுறுசுறுப்பாக இருந்தால், பூ, 25 ரூபாய்க்கு விற்கும்,' என்றனர், பூ வியாபாரிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை