உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாவட்டத்தில் தாசில்தார்கள் இடமாற்றம்

மாவட்டத்தில் தாசில்தார்கள் இடமாற்றம்

திருப்பூர்;திருப்பூர் மாவட்டத்தில், ஏழு தாசில்தார்களை இடமாற்றம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.லோக்சபா தேர்தலையொட்டி வருவாய்த்துறை, போலீசார் என, அனைத்து துறைகளில் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்தில் தாசில்தார் இடமாற்றம் மற்றும் பணி நியமனம் செய்து கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளார்.அதில், துணை தாசில்தார் ஜீவா பல்லடம் தாசில்தாராகவும், காங்கயம் தமிழ்நாடு மாநில வாணிப கழகம் கிடங்கு மேலாளர் பழனியம்மாள் தாராபுரம் சமூக பாதுகாப்பு திட்டம் தனி தாசில்தாராகவும், திருப்பூர் சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெயகுமார் திருப்பூர் தெற்கு சமூக பாதுகாப்பு திட்டம் தனி தாசில்தாராகவும், திருப்பூர் சமூக பாதுகாப்பு திட்டம் பாபு திருப்பூர் முத்திரைகள் அலுவலகம் தனி தாசில்தாராகவும், கலெக்டர் அலுவலகம் அலுவலக மேலாளர் (பொது) கனகராஜன், திருப்பூர் சப்-கலெக்டர் நேர்முக உதவியாளராகவும், தாராபுரம் கோட்ட கலால் அலுவலர் ஜெகஜோதி, காங்கயம் கிடங்கு மேலாளராகவும் மற்றும் பல்லடம் தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார், திருப்பூர் கலெக்டர் அலுவலக மேலாளர் (பொது) ஆகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ