உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / போக்குவரத்து மாற்றம் சோதனை முயற்சி

போக்குவரத்து மாற்றம் சோதனை முயற்சி

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி அலுவலக சந்திப்பு சிக்னலில், வாகன டிரைவர்கள் காத்திருப்பு நேரத்தை குறைப்பதற்காகவும், சிக்னலில் நிறுத்தமில்லாமல் செல்வதற்கு ஏதுவாக இன்று ஒரு நாள் மட்டும் சோதனை முயற்சியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அவ்வகையில், இன்று (25ம் தேதி) ஒரு நாள் மட்டும் எம்.ஜி.ஆர்., சிலை வழியாக மங்கலம் ரோடு செல்லும் வாகனங்கள், பெருமாள் கோவில் பின் காமராஜ் ரோடு வழியாக மத்திய பஸ் ஸ்டாண்ட் வலது புறமாக திரும்பி மாநகராட்சி அலுவலக சந்திப்பு வழியாக மங்கலம் ரோடு செல்ல வேண்டும்.புது மார்க்கெட் வீதி வழியாக வரும் அனைத்து ரக வாகனங்களும் இடது புறமாக மட்டுமே செல்ல வேண்டும். புது மார்க்கெட் வீதி வழியாக பயணிகள் பஸ் இயக்கப்படாது. மத்திய பஸ் ஸ்டாண்ட் மற்றும் பல்லடம் ரோடு வழியாக மங்கலம் ரோடு, அவிநாசி ரோட்டுக்கு வரும் அனைத்து ரக வாகனங்களும் எந்த தடையுமின்றி தொடர்ச்சியாக வழக்கம் போல் மாநகராட்சி அலுவலக சந்திப்பு வழியாக செல்லலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை