உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாவட்ட அளவில் கால்பந்து லீக்: வெற்றி பெற்ற உடுமலை அணி

மாவட்ட அளவில் கால்பந்து லீக்: வெற்றி பெற்ற உடுமலை அணி

உடுமலை;திருப்பூர் மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கால்பந்து லீக் போட்டி நடத்தப்பட்டு வருகின்றன. இப்போட்டியில், 22 அணிகள் பங்கேற்றுள்ளன.அவ்வகையில், உடுமலையில், ஒரு போட்டி நடத்தப்பட்டது. அதன்படி, போட்டியை, உடுமலை நண்பர்கள் கால்பந்து கழக தலைவர் வேலுச்சாமி, போட்டி ஒருங்கிணைப்பாளர் விஜயபாண்டி ஆகியோர் துவக்கி வைத்தனர்.அதன்படி, உடுமலை நண்பர்கள் கால்பந்து அணி, வாரியர்ஸ் கால்பந்து அணியுடன் மோதியது. துவக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய உடுமலை நண்பர்கள் கால்பந்து அணி, 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.வெற்றி பெற்ற அணி வீரர்களை, பயிற்சியாளர் கதிரவன் உள்ளிட்ட பலரும் வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ