மேலும் செய்திகள்
ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
02-Jun-2025
உடுமலை; உடுமலை நகராட்சியில், வழித்தட ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை நகராட்சி, 23வது வார்டுக்குட்பட்ட, அப்பாவு சந்து பகுதியை சேர்ந்த முகமது ரபீக்,50, தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:கடந்த, 50 ஆண்டுகளாக பயன்படுத்தி வரும், தனக்கு சொந்தமான நடை பாதையை ஆக்கிரமிக்கும் முயற்சி நடக்கிறது.அப்பாவு சந்துக்கும், அமணலிங்க வீதிக்கும் இணைப்பு சாலையாக இருந்த, 10.2 அடி வழித்தடத்தை தனி நபர் ஆக்கிரமித்துள்ளதால், தனக்கு சொந்தமான வழித்தடத்தை அபகரிக்கும் முயற்சி நடக்கிறது.இதுவரை, மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு, 150 மனுக்களுக்கு மேல் அனுப்பியும் தீர்வு கிடைக்கவில்லை.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.
02-Jun-2025