உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பைக் மீது வேன் மோதல்; இருவர் பரிதாப பலி

பைக் மீது வேன் மோதல்; இருவர் பரிதாப பலி

உடுமலை; உடுமலை அருகே பெரியபட்டியில் இருந்து தென்னை மட்டைகளை ஏற்றிய, 'ஈச்சர்' வேன் பழநி அத்திமரவலசைச்சேர்ந்த, கனகராஜ், 36; என்பவர் நேற்று மாலை ஓட்டி வந்துள்ளார்.வேன், உடுமலை - பல்லடம் மாநில நெடுஞ்சாலையில், குடிமங்கலம் அருகே வந்த போது, எதிரே வந்த பைக் மீது மோதியது.இதில், பைக்கில் பயணித்த, எஸ்.வல்லக்குண்டாபுரத்தை சேர்ந்த சதீஷ்குமார், 30; அதே கிராமத்தைச்சேர்ந்த சக்திவேல், 33 ஆகியோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற குடிமங்கலம் போலீசார், வழக்குப்பதிவு செய்து, கனகராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ