திருப்பூர்: திருப்பூர் தெற்கு உழவர் சந்தையில், தக்காளியை தொடர்ந்து நடப்பு வாரம், காய்கறிகள் விலையும் உயர்ந்துள்ளது. விற்பனை சுறுசுறுப்பான நிலையில், வரத்து மந்தமாக இருப்பதால், விலை உயர துவங்கியுள்ளது.கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில், தக்காளி விலை கிலோவுக்கு பத்து ரூபாய் உயர்ந்துள்ளது. உருளை கிலோவுக்கு, 20 ரூபாயும், பீர்க்கன், பாகல், பீன்ஸ், காலிபிளவர் கிலோவுக்கு பத்து ரூபாயும் உயர்ந்துள்ளது. குளிர்ந்த சீதோஷ்ண நிலை தொடர்ந்து பதிவாகி வருவதால், எலுமிச்சை விற்பனை சற்று குறைந்துள்ளது; இதனால், கிலோ, 110 ரூபாய் வரை விற்கப்பட்ட பழம், 90 ரூபாயாகியுள்ளது. குளிர் சீதோஷ்ணம் காரணமாக, வெண்டை வரத்து அதிகரித்து, கிலோவுக்கு பத்து ரூபாய் குறைந்துள்ளது. வழக்கமாக விலை குறைந்து இருக்கும் சுரைக்காய், முள்ளங்கி ஆகியவற்றின் விலை சீசன் துவக்கம், விற்பனை உயர்வு காரணமாக கிலோவுக்கு ஐந்து ரூபாய் கூடியுள்ளது; பச்சை மிளகாய், புடலங்காய் விலையில் மாற்றமில்லை.தெற்கு உழவர் சந்தை விலை நிலவரம் (கிலோவுக்கானது): கத்தரிக்காய் ரூ.60, வெண்டை 40, தக்காளி 35, பச்சை மிளகாய் 50, புடலங்காய் 40, அவரை 60, கொத்தவரை 40, பீர்க்கன் 40, சுரைக்காய் 20, பாகற்காய் 50, முள்ளங்கி 30, தேங்காய் கிலோ 65, வாழைக்காய் 25, எலுமிச்சை 80, அரசாணி 30, சாம்பல் பூசணி 20, வாழைத்தண்டு 10, வாழை பூ 10, பெரிய வெங்காயம் 20, சின்ன வெங்காயம் 50, உருளை 60, முட்டைக்கோஸ் 20, கேரட் 50, பீன்ஸ் 70, காலிபிளவர் 40, மேராக்காய் 18, இஞ்சி 70, மல்லித்தழை 40, கறிவேப்பிலை 40, புதினா 20, முருங்கை 120, பப்பாளி 30, பொரியல் தட்டை 30 ரூபாய்.