உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  விபத்து அபாயத்துடன் வாகனங்கள்; வேகத்தடை மீண்டும் அமைக்கப்படுமா!

 விபத்து அபாயத்துடன் வாகனங்கள்; வேகத்தடை மீண்டும் அமைக்கப்படுமா!

திருப்பூர்: துணை ஜனாதிபதி வருகைக்காக டவுன்ஹால் அருகே அகற்றப்பட்ட வேகத்தடை மீண்டும் அமைக்கப்படாத காரணத்தால், விபத்து அபாயத்துடன் வாகனங்கள் ரோட்டில் சென்று வருகிறது. திருப்பூர் மாநகரில் போக்குவரத்து நெரிசல், விபத்துகளை குறைக்கவும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மாநகர போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், திருப்பூருக்கு வந்தார். அப்போது, ரோடுகளில் இருந்த, வேகத்தடை அகற்றப்பட்டது. டவுன்ஹால் அருகே செல்வ விநாயகர் கோவில் பின்புறம் இரண்டு ரோடுகள் சந்திக்கும் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த வேகத்தடை அகற்றப்பட்டது. ஆனால், அகற்றப்பட்ட வேகத்தடை மீண்டும் அமைக்கப்படாமல் உள்ளது. அந்த ரோட்டில் வாகனங்கள் தாறுமாறாக ரோட்டை கடந்து சென்று வருகிறது. புஷ்பாவில் இருந்து ரயில்வே ஸ்டேஷனை நோக்கியும், ஊத்துக்குளி ரோட்டில் இருந்து டவுன்ஹால் நோக்கி செல்லும் வாகனம், சம்பந்தப்பட்ட சந்திப்பு பகுதியில் வேகமாக வருகின்றன. வேகத்தடை இல்லாத காரணமாக, அதிவேகமாக கடக்கும் வாகனத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, விபத்து நிகழும் முன், மீண்டும் வேகத்தடையை அமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை