உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  வாக்காளர் பட்டியல் திருத்தம்; மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

 வாக்காளர் பட்டியல் திருத்தம்; மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

திருப்பூர்: வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியை கலெக்டர் மற்றும் கமிஷனர் ஆகியோர் ஆய்வு செய்தனர். தமிழகத்தில் தேர்தல் கமிஷன் உத்தரவின் பேரில், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளிலும் இதற்கான படிவங்கள் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு, தற்போது பூர்த்தி செய்த படிவங்கள் பெறப்பட்டு வருகின்றன. அவ்வகையில், திருப்பூர் தெற்கு தொகுதி வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளை வாக்காளர் பதிவு அலுவலர் அமித் பகுதிவாரியாகச் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில், ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறையில், வாக்காளர்களிடம் இருந்து பெறப்பட்ட படிவங்கள் பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது. இவற்றை, மாவட்ட வாக்காளர் பதிவு அலுவலரான கலெக்டர் மணிஷ் நாரணவரே மற்றும் கமிஷனர் அமித் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர். பணி நிலவரம் குறித்து தேர்தல் பிரிவு மற்றும் கணிணி பிரிவு அலுவலர்கள் விளக்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை