உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  சட்டசபை தேர்தலுக்கு ஆயத்தம்; ஓட்டு இயந்திரங்கள் தயாராகின்றன

 சட்டசபை தேர்தலுக்கு ஆயத்தம்; ஓட்டு இயந்திரங்கள் தயாராகின்றன

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், எட்டு சட்டசபை தொகுதிகள் உள்ளன. 2024 லோக்சபா தேர்தலில் பயன்படுத்தப்பட்ட, பேலட் யூனிட், கன்ட்ரோல் யூனிட், வி.வி.பேட் உள்ளடக்கிய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் (இ.வி.எம்.), சட்டசபை தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டு, கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 3,997 கன்ட்ரோல் யூனிட், 3,997 பேலட் யூனிட்; 2,500 வி.வி. பேட் ஆகியவை, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. சட்டசபை தேர்தலுக்கு தயார்படுத்தும் வகையில், முதல்கட்ட இ.வி.எம். சரிபார்ப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதற்காக, புனேவிலுள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இருந்து, கன்ட்ரோல் யூனிட் மற்றும் பேலட் யூனிட்களில் பொருத்துவதற்கான புதிய பேட்டரிகள், கன்டெய்னர் லாரியில், கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்து சேர்ந்தன. அவை, கலெக்டர் அலுவலக இருப்பு அறையில், வைக்கப் பட்டுள்ளன. அடுத்த வாரம், பெங்களூருவிலிருந்து பெல் இன்ஜினியர் குழுவினர் திருப்பூர் வருகின்றனர். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில், ஸ்ட்ராங் ரூம் திறக்கப்பட்டு, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி நடைபெற உள்ளது. இருப்பில் உள்ள பேலட் யூனிட் மற்றும் கன்ட்ரோல் யூனிட்களில் பொருத்தப்பட்டுள்ள பழைய பேட்டரிகள் அகற்றப்பட்டு, புதிய பேட்டரி பொருத்துவது; பழைய தரவுகளை அழிப்பது; அவற்றின் செயல்பாடுகளை பரிசோதிப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ