உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆமை வேகத்தில் குடிநீர் பணி

ஆமை வேகத்தில் குடிநீர் பணி

திருப்பூர்;கூட்டுக்குடிநீர் திட்டம் வாயிலாக, திருப்பூர் ஒன்றியத்தின் வடக்கே உள்ள, 10 ஊராட்சிகளுக்கு, குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டது. மொத்தம், 165 குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டம், 2020 டிச., மாதம் துவங்கப்பட்டது.பட்டம்பாளையம், மேற்குபதி, சொக்கனுார், தொரவலுார், வள்ளிபுரம், ஈட்டிவீரம்பாளையம், பெருமாநல்லுார், காளிபாளைம், பொங்குபாளையம், கணக்கம்பாளையம் ஆகிய, 10 ஊராட்சி மக்கள் இத்திட்டத்தால் பயன்பெறுவர்.தற்போதைய குடிநீர் திட்டங்களில் மிக குறைவான தண்ணிர் மட்டுமே கிடைக்கிறது; 20 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே, பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய குழு செயலாளர் அப்புசாமி கூறுகையில், ''திருப்பூர் ஒன்றியத்தின் வடக்கே உள்ள மக்களுக்கு, போதிய குடிநீர் வினியோகம் இல்லை. குடிநீர் திட்டங்கள் இருந்தும் மக்களின் தேவைகள் பூர்த்தியாகவில்லை. புதிய திட்டத்தால், மேட்டுப்பாளையம் குடிநீர் வழங்கப்படுமென, மக்கள் காத்திருக்கின்றனர். பணிகள், ஆமை வேகத்தில் நடந்துவருகிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ