உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தரைமட்ட பாலத்தில் தண்ணீர் தேக்கம்

தரைமட்ட பாலத்தில் தண்ணீர் தேக்கம்

உடுமலை,; உடுமலை நகரம், தலைகொண்டம்மன் கோவிலில் இருந்து துவங்கி, தங்கம்மாள் ஓடை பாலம் வழியாக ராகல்பாவி செல்லும் இணைப்பு ரோட்டை, முன்பு கிராம மக்கள் அதிகளவு பயன்படுத்தி வந்தனர். நீண்ட இடைவெளிக்குப்பிறகு, இந்த ரோடு கடந்தாண்டு புதுப்பிக்கப்பட்டது.இந்த வழித்தடத்தில், அகல ரயில்பாதை பணிகளின் போது, நகர எல்லை முடியும் இடத்தில், தரைமட்ட பாலம் கட்டப்பட்டது. தாழ்வாக கட்டப்பட்ட இந்த பாலத்தில், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குகிறது.ஒரு மழைக்கு தண்ணீர் தேங்கினால், பல மாதங்களுக்கு பாலத்தை கடந்து செல்ல முடியாது. இதனால், காலை நேரங்களில் அவ்வழியாக, பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் வரமுடிவதில்லை.ராகல்பாவி பிரிவுக்கு சென்று அங்கிருந்து, தேசிய நெடுஞ்சாலை வழியாக, நகருக்கு வர வேண்டியுள்ளது. ரயில்வே தரை மட்ட பாலத்தில், தேங்கும் தண்ணீரை அகற்ற, எந்த துறையினரும் நடவடிக்கை எடுப்பதில்லை. பல கிராம மக்கள் பாதித்தும், நீண்ட காலமாக இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை. நிரந்தர தீர்வை மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி