மேலும் செய்திகள்
தொழிலாளி கொலை: ஒருவர் கைது
6 minutes ago
விளக்கு விற்பனை ஜோர்
7 minutes ago
5ல் வேலைவாய்ப்பு முகாம்
12 minutes ago
பல்லடம்: சின்னக்காளிபாளையம் கிராமத்தில், மாநகராட்சியின் குப்பைகளை கொட்டுவதற்கு ஐகோர்ட் அனுமதி வழங்கிய நிலையில், கோர்ட் உத்தரவை மதிப்பதாகவும்; மக்களின் போராட்டம் மேலும் வீரியமடையும், என்றும் போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர். திருப்பூர் அருகே, இடுவாய் ஊராட்சி, சின்னக்காளிபாளையம் கிராமத்தில், மாநகராட்சி நிர்வாகம் குப்பைகள் கொட்டி திடக்கழிவு மேலாண்மை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதற்கு, இடுவாய், 63 வேலம்பாளையம், ஆறுமுத்தாம்பாளையம், கரைப்புதுார் ஆகிய நான்கு கிராம மக்களும் எதிர்ப்பு தெரிவித்து, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பான வழக்கு விசாரணை, சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. நேற்று நடந்த விசாரணையில், மாநகராட்சி தேர்வு செய்துள்ள இடத்தின் ஒரு பகுதியில் மட்டும் குப்பை கொட்ட கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் கூறியதாவது: சின்னக்காளிபாளையம் கிராமத்தில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக, இப்பகுதி பொதுமக்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கான மக்களின் எதிர்பார்ப்பை ஈடு செய்யும் வகையில், சென்னை ஐகோர்ட் வாயிலாக தீர்வு கிடைக்கும் என எதிர்பார்த்தோம். இருப்பினும், பிரச்னைக்குரிய இடத்தின் ஒரு பகுதியில் மட்டும் குப்பை கொட்ட கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. கோர்ட் உத்தரவை மதிக்கிறோம். ஆனால், ஒருபோதும் மக்களின் போராட்டம் ஓயாது. மேல் முறையீட்டுக்கு 2 நாள் அவகாசம் உள்ளது. அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், நாளை, பா.ஜ. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை போராட்டத்தில் பங்கேற்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.
6 minutes ago
7 minutes ago
12 minutes ago