உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மக்கள் பிரச்னைக்கு தீர்வு: பெண் அதிகாரிக்கு சபாஷ்

மக்கள் பிரச்னைக்கு தீர்வு: பெண் அதிகாரிக்கு சபாஷ்

திருப்பூர்;பல்லடம், கரைப்புதுார் ஊராட்சி, அய்யம்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள், தங்கள் பகுதியில் கழிவுநீர் தேங்கியது தொடர்பாக கலெக்டரிடம் நேற்று மனு அளித்தனர்.பொதுமக்கள் கூறியதாவது:அய்யம்பாளையத்தில் சாக்கடை கால்வாய் புதிதாக கட்டப்பட்டுள்ளது. கழிவுநீர் செல்ல வழியில்லாததால், குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கிறது. ஊராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் எந்த பயனும் இல்லாததால், கலெக்டர் மற்றும் ஊராட்சி உதவி இயக்குனரிடம் முறையிட்டுள்ளோம், என்றனர். புகாரை பெற்றுக்கொண்ட உடன், உதவி இயக்குனர் மதுமிதா உடனடியாக களமிறங்கினார். பொறியாளர்களுடன் சென்று, புகார் கூறப்பட்ட பகுதியை பார்வையிட்டார்.உதவி இயக்குனர் மதுமிதா கூறியதாவது:கழிவுநீரை வெளியேற்றுவதற்கான 'டிஸ்போஸபிள் பாய்ன்ட்' இல்லை. மழை பெய்ததால், கால்வாய் நிரம்பி, குடியிருப்பு பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ளது. தற்காலிக தீர்வாக, குழி தோண்டப்பட்டு, கழிவுநீர் கொண்டுவிடப்பட்டுள்ளது. சர்வே செய்து, அரசு புறம்போக்கு நிலத்தில் 'சோக்பிட்' அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை