உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தொழிலாளியை கொன்ற மனைவி, 4 பேருக்கு ஆயுள்

தொழிலாளியை கொன்ற மனைவி, 4 பேருக்கு ஆயுள்

திருப்பூர்:திண்டுக்கல், வடமதுரையை சேர்ந்தவர் ராஜகாளீஸ்வரன், 23; கட்டட தொழிலாளி. இவருக்கும், திருப்பூர் எம்.எஸ்.நகரை சேர்ந்த ஜனனி, என்பவருக்கும், 2019ல் திருமணம் நடந்தது. தம்பதிகூத்தம்பாளையத்தில் வசித்தனர்.தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. ஜனனி தன் பெற்றோர் வீட்டுக்கு சென்று விடுவார். கடந்த 2020, நவம்பரில் அவர் பெற்றோர் வீட்டுக்கு சென்றார். பல முறை அழைத்தும் திரும்ப வரவில்லை.கடந்த 2020, நவ., 15ல், அவரை அழைக்க வீட்டுக்கு வந்த போது, ஜனனி, 19, அவரது தாய் ஜோதி, 45, சகோதரர்கள் மணிகண்டன், 23, பிரசாந்த், 21 மற்றும் உறவினர் பரத், 22, ஆகியோர், ராஜகாளீஸ்வரனை தாக்கியும், கத்தியால் குத்தியும் தப்பினர்.திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜகாளீஸ்வரன் உயிரிழந்தார். அனுப்பர்பாளையம் போலீசார், ஐந்து பேரையும் கைது செய்தனர்.திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் நீதிபதி சொர்ணம் நடராஜன் வழக்கை விசாரித்து, ஐவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி