உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உப்பாறு அணைக்கு உயிர் நீர் விடப்படுமா?

உப்பாறு அணைக்கு உயிர் நீர் விடப்படுமா?

திருப்பூர்,; ''தாராபுரம், உப்பாறு அணைக்கு பி.ஏ.பி., தொகுப்பில் இருந்து உயிர் நீர் விட வேண்டும்'' என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.தாராபுரத்திலுள்ள உப்பாறு அணைக்கு, பி.ஏ.பி., தொகுப்பில், அரசூர் ஷட்டர் வழியாக தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. உப்பாறு அணையை சார்ந்து, 6,100 ஏக்கர் பாசன பரப்பு உள்ளது. மாவட்டம் முழுவதும் வடகிழக்கு பருவமழை சிறப்பாக பெய்துள்ளது. ஆனாலும், உப்பாறு அணை பகுதிகளில் போதிய மழைப்பொழிவு இல்லை. பி.ஏ.பி., தொகுப்பிலிருந்து உப்பாறு அணைக்கு இம்மாதம் உயிர் நீர் திறக்கவேண்டும் என, மாவட்ட நிர்வாகத்திடம் விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவருகின்றனர். ஆனாலும், பி.ஏ.பி., வாய்க்காலில், உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்காதது விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.5 அடி நீர்தான் பயன்படுத்த முடியும்தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர் காளிமுத்து கூறியதாவது:உப்பாறு அணையில் மொத்தம், 24 அடியில், 12 அடிக்கு மட்டுமே தண்ணீர் உள்ளது. அதிலும், 7 அடிக்கு தண்ணீர் திறக்கமுடியாது. அதாவது, 5 அடி நீரைத்தான் பயன்படுத்த முடியும். பாசனத்துக்கு அதிகபட்சம் நான்கு நாட்கள் மட்டுமே தண்ணீர் திறக்கமுடியும். கான்டூர் கால்வாய் அல்லாமல் பஞ்சலிங்க அருவியிலிருந்தும் கூடுதல் நீர் திருமூர்த்தி அணைக்கு வந்துகொண்டிருந்தது. அதனால், பி.ஏ.பி., தொகுப்பிலிருந்து இம்மாதம் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு உயிர் நீர் வழங்கவேண்டும் என, மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வருகிறோம்.ஆழ்துளைக்கிணறு நீர்மட்டம் சரிவுஉப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார்; ஆனால், இன்னும் தண்ணீர் திறக்கப்படவில்லை. திருமூர்த்தியில் 52 அடிக்கு தண்ணீர் உள்ளது; நீர்மட்டம் 53 அடியை எட்டும்போது, உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்கப்படும் என்கின்றனர். பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் வரத்து தற்போது குறைந்துவிட்டது. இதனால் உப்பாறு அணைக்கு உயிர்நீர் கிடைக்குமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.பி.ஏ.பி., பாசன பகுதிகளில் போதுமான அளவு மழை பெய்துள்ளது. ஆனாலும், பி.ஏ.பி., மூன்றாவது மண்டலத்தில் ஐந்தாவது சுற்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. உப்பாறு பாசன விவசாயிகள், தென்னை மற்றும் தட்டைப்பயிறு, பாசிப்பயிறு, கொள்ளு உள்ளிட்ட மானாவாரி பயிர்களை பயிரிட்டுள்ளனர். கால்நடைத் தீவனத்துக்காக, சோளத்தட்டு பயிரிடப்பட்டுள்ளது. விவசாய நிலங்களில் உள்ள ஆழ்துளை கிணறுகளின் நீர்மட்டம் சரிந்துள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.---உப்பாறு அணை

முற்றுகைப் போராட்டம் நடத்த முடிவு

''நாங்கள் நேரடி பாசனத்துக்காக கேட்கவில்லை. நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்திக்கொள்ளவே, உயிர் நீர் கேட்கிறோம். இதற்காக, இம்மாதம் மட்டும் கலெக்டரிடம் பத்து மனுக்கள் அளித்துள்ளோம். கட்டாயம் உயிர் நீர் வழங்கப்படும் என்கிறார்; ஆனால், இன்னும் தண்ணீர் திறந்தபாடில்லை. உப்பாறு பாசன விவசாயிகளை, அரசு அதிகாரிகளும், பி.ஏ.பி., விவசாயிகளும் ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை. இம்மாத இறுதிக்குள் உப்பாறு அணைக்கு உயிர் நீர் திறக்க வேண்டும். இல்லையென்றால் பாசன விவசாயிகள் திரண்டு, கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்'' என்று தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத் தலைவர் காளிமுத்து கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ