உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  பஸ்சில் மாயமான தாலி சங்கிலி அரசிடம் இழப்பீடு கேட்டு பெண் மனு

 பஸ்சில் மாயமான தாலி சங்கிலி அரசிடம் இழப்பீடு கேட்டு பெண் மனு

திருப்பூர்: திருப்பூர் அருகே பஸ் பயணத்தின் போது மாயமான தங்க சங்கிலி திரும்ப கிடைக்கவில்லை. தற்போதைய விதிகளின்படி அதற்கான இழப்பீட்டை பெற்றுத் தருமாறு, சட்டப்பணிகள் ஆணைக்குழுவிடம் பெண் கோரிக்கை விடுத்துள்ளார். திருப்பூர் நெருப்பெரிச்சல், பாரதி நகரை சேர்ந்த சரோஜா, 61, திருப்பூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவருக்கு அனுப்பிய மனுவில் கூறியுள்ளதாவது: கடந்த 2018ல், குண்டடம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டு, பஸ்சில் வீடு திரும்பி கொண்டிருந்த போது, என், 5.5 சவரன் தாலி சங்கிலி காணாமல் போனது. குண்டடம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதுவரை நகை மீட்கப்படவில்லை. சென்னை ஐகோர்ட் சமீபத்தில் பிறப்பித்த உத்தரவு மற்றும் அரசாணை படி, மீட்கப் படாத என் நகைகளுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். சட்ட உதவி மைய வக்கீல் தமிழ்ச்செல்வி கூறியதாவது: இது போன்ற சம்பவங்களில் இழப்பீடு கேட்டு விண்ணப்பிக்கும் போது, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் ஒரு வக்கீல் நியமிக்கப்பட்டு, அவர் அனைத்து ஆவணங்களையும் பெற்று இழப்பீட்டுக்கான தகுதி இருப்பின் அது குறித்து அறிக்கை சமர்ப்பிப்பார். ஆவணங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில், மாயமான தாலி சங்கிலிக்கான இழப்பீட்டை அரசே வழங்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை