உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நிலா சோறு சாப்பிட்ட பெண்கள்

நிலா சோறு சாப்பிட்ட பெண்கள்

அனுப்பர்பாளையம்;திருப்பூர் போயம்பாளையம் சக்தி நகர் மூன்றாவது வீதியில் 30வது ஆண்டு தைப்பூச விழா நடைபெற்றது.விழாவையொட்டி, தொடக்க நாள் முதல் அப்பகுதி பெண்கள், சிறுமிகள் வீடுகளில் இருந்து, உணவு கொண்டு வந்து, வீதியில் வைத்து கும்மியடித்து நிலாச்சோறு சாப்பிட்டு வந்தனர். நிறைவு நாள் விழாவையொட்டி அலங்கரித்து வைக்கப்பட்ட முருக பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.பெண்கள் விவசாயம், கால்நடை உள்ளிட்ட அனைத்து செல்வங்களும் பெருக வேண்டி கும்மியடித்து, இறைவனுக்கும், நிலவுக்கும், இயற்கைக்கும் நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து, கலந்து கொண்ட பொது மக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை