| ADDED : ஜூலை 27, 2024 11:50 PM
திருப்பூர்;'அடல் இன்குபேஷன்' மையம் மற்றும் ஆஸ்திரேலியன் வூல்மார்க் நிறுவனம் சார்பில், கம்பளி ஆடை தயாரிப்பு குறித்த வழிகாட்டுதல் கருத்தரங்கு, வூல் பார் வேர்ல்டு' என்ற தலைப்பில் நடந்தது. நிகழ்ச்சியில், தலைமை நிர்வாக அதிகாரி செந்தில்குமார் வரவேற்றார். 'நிப்ட்-டீ' கல்லூரி முதன்மை ஆலோசகர் ராஜா சண்முகம், கல்லுாரி தலைவர் மோகன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். 'வூல் மார்க்' மற்றும் ஆதித்ய பிர்லாவின் சிறப்பு விருந்தினர்களாக, ஜோதிரஞ்சன் பரிடா, பத்மஜா மோஹன்ட்டி, அஜய் பிரதான் மற்றும் அலோக்குமார் பங்கேற்றனர். புதிய கண்டுபிடிப்பு'அடல் இன்குபேஷன்' மையத்தில் பதிவான இரண்டு புத்தாக்க நிறுவனங்களின், புதிய கண்டுபிடிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட, 'அணிநி' என்ற, 'மொபைல் ஆப்'பை, தலைவர் மோகன் அறிமுகம் செய்தார். கோவையை சேர்ந்த புத்தாக்க நிறுவனமான, 'ஹைப்பர் ஹேக்' மூலமாக வடிவமைக்கப்பட்டு, 'அடல் இன்குபேஷன்' மையத்தின் உதவியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 'நிட்டர்' மற்றும் சப்ளையரை இணைக்கும் பாலமாக செயல்படும், 'மொபைல் ஆப்'பை, கல்லூரியின் முதன்மை ஆலோசகர் ராஜா சண்முகம் அறிமுகம் செய்து வைத்தார். திருப்பூர் 'நிட்நெக்ஸ்சேஸ்' நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்விரு செயலிகளின் அமைப்பு மற்றும் அதன் சிறப்புகள் குறித்தும், 'அடல் இன்குபேஷன்' மையத்தில் வழங்கப்படும் சலுகைகள் குறித்தும், தலைமை செயல்பாட்டு அதிகாரி அருள்செல்வன் தெரிவித்தார். ---'அடல் இன்குபேஷன்' மையத்தில்க, நடந்த கம்பளி ஆயத்த ஆடை தயாரிப்பு குறித்த கருத்தரங்கில், ராஜா சண்முகம் பேசினார்.