சேவூர் செம்பியன் குளம் துார்வாரும் பணி துவக்கம்
அவிநாசி : சேவூரில் உள்ள செம்பியன் குளத்தில் குப்பை கழிவுகள், சீமை கருவேல் மரங்கள், முட்புதர்கள், பிளாஸ்டிக் மற்றும் கழிவுகளை அகற்றும் பணி துவங்கியது. இப்பணியை செம்பியன் குளம் காக்கும் பாதுகாப்பு இயக்கம் மற்றும் ஊர் மக்கள் சார்பில், முறியாண்டம்பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் ரவிக்குமார் துவக்கி வைத்தார்.